மறுமலர்ச்சி திமுக சார்பில் திராவிட மூவர் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 October 2022

மறுமலர்ச்சி திமுக சார்பில் திராவிட மூவர் பிறந்தநாள் விழா.

திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக நடத்திய  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தந்தைப் பெரியார் - பேரறிஞர் அண்ணா - வைகோ ஆகிய திராவிட மூவர் பிறந்த நாளை முன்னிட்டு  "அண்ணா இன்னும் ஏன் தேவைப்படுகிறார்?" என்னும் தலைப்பில்  முதல் சுற்றுப் பேச்சுப் போட்டி மூன்று மையங்களில் நடந்தது.


திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மணப்பாறை சட்டமன்றத் தொகுதி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளில் இருந்தும் ஒரு கல்லூரிக்கு மூவர் என 45 மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.


மணப்பாறையில் நடந்த பேச்சுப் போட்டியை திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் மணப்பாறை ஆதவன் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் பா.பழனிவேல்குமரன் முதல் பரிசு ரூ.3000 பெற்றார்.


மணப்பாறை அரசு கலைக் கல்லூரி மாணவி சித்திரைச்செல்வி இரண்டாம் பரிசாக ரூ.2000 பெற்றார், மணப்பாறை ஆதவன் கலை அறிவியல் கல்லூரி மாணவி க.புவனேஸ்வரி மூன்றாம் பரிசாக ரூ.1000 பெற்றார், முதல் மூன்று பரிசுகளை மணப்பாறை நகரச் செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஆ.மகுடீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பி.ஏ.சீனிவாசன் ஆகியோர் வழங்கினார்கள்.


இப்போட்டியின் நடுவராக மணவைத் தமிழ்மன்றச் செயலாளர் கவிஞர் கோ.நவமணி சுந்தரராசன் இருந்து பரிசு பெற்றவர்களை தேர்வு செய்தார். போட்டியின் நெறியாளராக வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி ஒருங்கிணைத்தார், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பேச்சுப் போட்டியை தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா சாக்ரடீஸ் தொடங்கி வைத்தார்.


போட்டியில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவி ஆர்.அபிநயா முதல் பரிசாக ரூ.3000, உருமு தனலட்சுமி கல்லூரி மாணவி வி.ஜெயசுவிதா இரண்டாம் பரிசாக ரூ.2000, துவாக்குடி அரசு கலைக் கல்லூரி மாணவன் எஸ்.நிஷாந்குமார் மூன்றாம் பரிசாக ரூ.1000 பெற்றனர், முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பா சுப்ரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அ.சக்திவேல், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பெல் ச.மணிவண்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.


மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்  பெரியார் - அண்ணா பெருமைகள் குறித்துப் பேசினார், போட்டியில் நடுவராக இருந்து திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர் ஆநிறைச்செல்வன் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தார். போட்டியை பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் நெறியாளராக இருந்து வழிநடத்தினார்.


திருவரங்கம் தொகுதியில் நடந்த பேச்சுப் போட்டியை  மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி தொடங்கி வைத்தார், போட்டியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரி மாணவி அ.அருணா முதல் பரிசாக ரூ.3000,  பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரி மாணவர் ம.க.சூரியா இரண்டாம் பரிசாக ரூ.2000, காவேரி கல்லூரி மாணவி மு.கோடீஸ்வரி மூன்றாம் பரிசாக ரூ. 1000 பெற்றனர்.


முதல் மூன்று பரிசுகளை மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜன் பன்னீர்செல்வம், வைகோ சுப்பு ஆகியோர் வழங்கினார்கள், பரிசு பெற்றவர்களுக்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் வெற்றிச் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.


இப்போட்டிக்கு நடுவராக இருந்து உருமு தனலட்சுமி கல்லூரி பேராசிரியர் மனோன்மணி வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தார். இப்போட்டிக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சாத்தனூர் ஆ.முகேஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நா.ரேணுகாதேவி ஆகியோர் நெறியாளர்களாக இருந்து ஒருங்கிணைத்தனர்.


இதனைத் தொடர்ந்து முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவர்களும்    திருச்சி பல்நோக்கு சமூகசேவை வளாகத்தில் நடைபெற்ற நிறைவுப் போட்டியில் பங்கேற்று, அனைவரும் வியக்கத்தகுந்த வண்ணம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஒருங்கிணைப்பில் நிறைவுப் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு கழகத்தின் மாநில விவசாய அணிச் செயலாளர் புலவர்.க.முருகேசன்  தலைமையேற்று நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்  திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார், மாநில மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர்.


ஒரு கல்லூரிக்கு மூன்று நபர்கள் கலந்து கொள்ளலாம் என்ற நமது அறிக்கையின் வாயிலாக, பதினைந்து கல்லூரிகளில் இருந்து 45 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் மூலம்  ஒட்டு மொத்த கல்லூரிகளில் இருந்து  சுமார் 30000 மாணவர்களுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்து, இளம் தலைமுறையினர் பேச வேண்டும் என்ற இயக்கத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது.


நிறைவுப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக் கழக மாணவன் ம. க சூர்யா,திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவி அ.அருணா,மணப்பாறை அரசு கலைக் கல்லூரி மாணவி சித்திரைச்செல்வி ஆகியோருக்கு கழகத்தின் அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டுரை நிகழ்த்தினார், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் நடுவர் பொறுப்பேற்ற முனைவர் சோ மனோன்மணி, பேராசிரியர் ஆநிறைச்செல்வன்,கவிஞர் மு.மு. அஷ்ரப் அலி,நெறியாளர் பேராசிரியர் தி. நெடுஞ்செழியன் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்விற்கு முதல் பரிசாக ரூ.5000 மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.பாலுசாமி,அவர்களும், இரண்டாம் பரிசு ரூ.3000, மணிகண்டம் ஒன்றியச் செயலாளர், எம்.தங்கவேலு அவர்களும், மூன்றாம் பரிசு ரூ.2000, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆ.துரைராஜ், அவர்களும் வழங்கினார்கள்.


இந்நிகழ்வில் தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் அடைக்கலம்,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் மைக்கேல்ராஜ்,தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார்,மாநில இலக்கிய அணித் துணைச் செயலாளர் ராஜன் இளமுருகு, மாவட்டப் பொருளாளர் வைகோ பழனிச்சாமி,மாவட்டத் துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன், மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.சுப்ரமணியன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.திருமாவளவன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர்,துவாக்குடி நகரச் செயலாளர் மோகன் பெரியகருப்பன்,நகரத் துணைச்செயலாளர் லிவிங்டன் தாஸ்,நகர அவைத்தலைவர் கணேசன்,கொளஞ்சியப்பன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சாத்தனூர் ஆ.முகேஷ், துணை அமைப்பாளர்கள் பா.ஜெகந்நாத், ஆரோக்ய ரெக்ஸ் தன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சூரியூர் ராமசாமி,இளம்புயல் அண்ணாத்துரை,மாவட்டத் தொண்டர் அணி அமைப்பாளர் ஆர்.ராமன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்மலைப்பட்டி கணேசன், மாநகர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுடலைமுத்து,காட்டூர் காமராஜ்,டொமினிக், ஆடிட்டர் வினோத்,ராஜ அகிலன், மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் திரளாக பங்கேற்று திராவிட மூவர் பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad