நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின், இரண்டாவது அலகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மரக்கூழ் ஆலையை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில், தலைவர், மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் டாக்டர்.மு.சாய்குமார் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இஆ.ப.,, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளர் (வனத் தோட்டம்) சீனிவாசன், முதன்மை பொது மேலாளர் (காகித அட்டை) பானுபிரசாதமற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
No comments:
Post a Comment