கருப்பூர் ஊராட்சி தூய்மை காவலர்கள் ஏ ஐ டி யு சி கிளை துவக்கம் நிர்வாகிகள் தேர்வு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 October 2022

கருப்பூர் ஊராட்சி தூய்மை காவலர்கள் ஏ ஐ டி யு சி கிளை துவக்கம் நிர்வாகிகள் தேர்வு.

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் கே டி கே தங்கமணி அரங்கத்தில் மணப்பாறை ஒன்றியம் கருப்பூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி மற்றும் தூய்மை பணி காவலர்கள் தொழிற்சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது 


இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்டம் உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏ ஐ டி யு சி சங்கம்  புத்தாநத்தம்  கிளை  தலைவர் ஜனசக்தி உசேன் தலைமை வகித்தார் மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியன் சங்கத்தின் அமைப்பு நிலை குறித்து உரை நிகழ்த்தினார்  


புதிய சங்கத்தின் நிர்வாகிகளாக  தலைவராக ஜனசக்தி உசேனும் துணைத் தலைவராக மருதை வீரன் செயலாளராக பழனியம்மாள் துணை செயலாளர்களாக அழகம்மாள் மாரியம்மாள் பொருளாளராக சக்திவேல் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad