மணப்பாறையில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழா தேவர் பேரவை சார்பில் ஞாயிற்றுக்கி ழமைநடைபெற்றது, மணப்பாறை அடுத்த அண்ணாவி நகர் விநாயகர் கோயிலில் பேரவையின் தலைவர் அய்யாக்காளை தேவர் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு பேரவை இளைஞரணித் தலைவர் எம்.கே. முத்துப் பாண்டிதேவர் முன்னிலை வகித்தார். முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற்று, பேரவை கொடியேற்றம், பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்வில் திமுக நகரச் செயலாளர் மு.ம. செல்வம், மதிமுக மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், வழக்கறிஞர் பி.ஏல். கிருஷ்ணகோபால், அமமுக நகர செயலாளர் வழக்குரைஞர் சி.மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் நகரச் செயலாளர் சீரா. ஆனந்தன், திமுக நிர்வாகிகள் மு.சோழை ராஜன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் சக்தி பிரகாஷ், விடுதலை மோகன், மதிமுக பாதுஷா | தமிழர் தேசிய முன்னணி உலகநாதன், அமமுக ஆர்.டி.பாலாஜி, சாகுல்ஹமீது, கே.ஏ.இப்ராஹீம், அண்ணாமதி, கே.கே.எம்.மகேந்திரன், பசும்பொன் சந்திரன், மார்கெட் சேகர், வாழ்க்கை. சரவணன், கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment