திருச்சி மாவட்ட ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பாலாஜி சுரேஷ், செயலாளர் ரியாஸ் பாஷா, பொருளாளர் மித்ரா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள் கதிரவன், ராஜேந்திரன், ஜோசப், கும்கி மணி, ராயல் வினோத், முத்து மணல் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை சம்ப ந்தமான ஒப்பந்த வேலைகளில் திருச்சி மாவட்ட ஜே.சி.பி. வாகனத்தின் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment