மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் கே டி கே தங்கமணி அரங்கில் ஏ ஐ டி யு சி மணப்பாறை அமைப்புசாரா தொழிலாளர் சங்க ஆண்டு பேரவை நடைபெற்றது.
இவ் ஆண்டுப்பேரவைக்கு மணப்பாறை அமைப்புச்சார தொழிலாளர் சங்க பொது செயலாளர் நல்லுச்சாமி தலைமை வகித்தார் பேரவையை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் பெருமாள் உரை நிகழ்த்தினர்.
புதிய நிர்வாகிகளாக தலைவராக பழனிச்சாமி துணைத்தலைவர்களாக ஜனசக்தி உசேன் செயலாளராக நல்லுச்சாமி துணைச் செயலாளர்களாக கண்ணுச்சாமி பொன்னம்மாள் பொருளாளராக பூபதி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை வாழ்த்தி திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி சங்க மாவட்ட தலைவர் த.இந்திரஜித் உரை நிகழ்த்தினர் அனைவருக்கும் ஜனசக்தி உசேன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment