மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யூ சி சங்க ஆண்டு பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 November 2022

மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யூ சி சங்க ஆண்டு பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கே டி கே தங்கமணி கூட்ட அரங்கில் இயங்கும் ரவிசந்திரன் நினைவு அரங்கில் அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யு சி மணப்பாறை கிளை ஆண்டு பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இப்பேரவைக்கு கண்ணன் தலைமை வகித்தார் வேலை அறிக்கையை செயலாளர் வைத்தார்  வரவு செலவு அறிக்கை பொருளாளர் வைத்தார் இவ்விரு அறிக்கை மீது விவாததிற்குக்கு பின் ஏக மனதாக ஏற்கப்பட்டது.


பேரவையை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் துவரங்குறிச்சி கிளை அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யு சி  கிளை தலைவர் ஆறுமுகம் ஒய்வுபெற்றோர் சங்க நிர்வாகிகள் குமரசங்கு செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி உரை நிகழ்தினார்கள்.


புதிய நிர்வாகிகளாக. தலைவராக சரவணண், துணைத்தலைவர்களகாக பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, முத்துச்சாமி, ஸ்டாலின், வேளங்கண்ணி, தனிஸ்லாஸ், செயலாளராக மாசிமலை, துணைச்செயலாளர்களாக காளிதாஸ், இராசாமி, அர்ஜூணன், அன்பழகன், சங்கர், பொருளாளராக கண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தங்கவேல், முருகேசன், முருகேசன், கண்ணுச்சாமி, தனபால், வடிவேல், இராஜேந்திரன், தகவல் மற்றும் செய்தி தொடர்பாளராக தெய்வேந்திரனும் ஏகமனதாக தேர்ந்து செய்யப்பட்டனர்.


புதிய நிர்வாகிகளை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில முன்னாள் நிர்வாககுழு உறுப்பினர் த.இந்திரஜித் அரசு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யு சி  மாநில துணைப் பொது செயலாளர் சுப்பிரமணியன் மாநில பொருளாளர் நேருதுரை ஆகியோர் உரைநிகழ்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad