இப்பேரவைக்கு இந்திரஜித் தலைமை வகித்தார் அஞ்சலி தீர்மானம் செயலாளர் வேலை அறிக்கை, பொருளார் வேலை அறிக்கை வைத்தனர் விவதாதிற்கு பின் ஏகமனதாக நிறைவேற்றபட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக இந்தரஜித்தும் ,பொதுச் செயலாளராக சுப்பிரமணியனும் பொருளாளராக வெங்கராமுலும் துணைத் தலைவர்களாக நதியா, வீரன், மகாமணி துணை செயலாளர்களாக எம் ஆர் முருகன், ஜனசக்தி உசேன் காமாட்சி, நிர்வாக குழு உறுப்பினர்களாக ஹரிஹரன், குணசிங், பொன்னம்மாள், அருணகிரி, தமிழரசன், கணேசன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்க செயலாளர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்கள்.
தமிழக அரசு அரசாணை எண் 152 ஐ ரத்து செய்து அவுட் சோர்சிங் மூலம் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். மூன்று ஆண்டு பணி முடித்த உள்ளாட்சி தினக்கூலிகள் அல்லது தொகுப்பு ஊதியம் பெறுபவர்களை கால முறை ஊதியம் பெறுபவர்களாக உத்தரவிட்ட அரசாணை எண் 129 ஐ அமல்படுத்த வேண்டும்
நகராட்சிகளில் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களின் ஊதியம் ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்க வேண்டும் ஒப்பந்த பணியாளர் சட்டப்படி அவர்களுக்கு உரிய சலுகைகள் அளித்திட வேண்டும். ஆறு நாள் பணிக்கு ஒரு நாள் ஓய்வு என்கிற சட்டப்படி வார ஓய்வு அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
ஊராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பம்ப் ஆப்ரேட்டர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 21,000 வழங்கிட வேண்டும் அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தனி பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் .என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment