சீனிவாச ராமானுஜன் அவர்களின் 135 வது பிறந்தநாள் மற்றும் தேசிய கணிதநாள் விழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 December 2022

சீனிவாச ராமானுஜன் அவர்களின் 135 வது பிறந்தநாள் மற்றும் தேசிய கணிதநாள் விழா நடைபெற்றது.

 

பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக தகவல் துறையும் தர கட்டுபாட்டு மையமும் இணைந்து சீனிவாச ராமானுஜன் அவர்களின் 135 பிறந்தநாள் மற்றும் கணித நாள் விழாவாக மிக விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் நூற்றூக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு துறையின் இயக்குனர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் நூலகர்கள் கலந்து பயன்பெற்றனர். 



முனைவர் மா.செல்வம் துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் ராமானுஜன் கணிதபுலமை உலக அரங்கில் எவ்வாறு அவரின் திறமைகள் போற்றப்பட்டன என்றும் அவர் கணித பயன்பாடுகள், சமன்பாடுகள் Number Theory infinite Theory மற்றும் பல்வேறு கணித சமன்பாடுகளான விளக்க உரைகள் ஆகியவற்றை தற்போதிய கணித முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயனளிக்க கூடியது என்று குறிப்பிட்டார்கள். மேலும் அவருடைய உரையில் கும்பகோண அரசு கல்லூரியில் ராமானுஜம் படித்ததை பற்றியும் அது நமக்கு எவ்வளவு பெருமை என்பதை பற்றியும் நமக்கு எடுத்துரைத்தார்கள். 


இளம் வயதிலேயே fellow of Royal Society என்று சொல்ல கூடிய ஒரு பெரிய பெருமைய லண்டனில் உள்ள Royal Society என்று அழைக்கப்படும் மிக உயர்ந்த விருதுகளை அளிக்க கூடிய உலகத்திலேயே அறிவியல் ஆராய்ச்சியில் கெளரவமாக கருதப்படும் விருதினை அவர் இளம் வயதில் பெற்றார் என்று குறிப்பிட்டார். மேலும் இந்த விழாவில் கல்லூரி துணை கல்வி இயக்குனர் குணசேகரன் அவர்களும் உரையாற்றினார்கள். பல்வேறு துறையின் தலைவர்கள் பல்கலைக்கழக ஆட்சிகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் சீனிவாச ராமானுஜன் 135 வது பிறந்தநாளையொட்டி 135 பல்வேறு மரக்கன்றுகள் பல்கலைக்கழக பல்வேறு பகுதிகளில் நடப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad