புத்தாண்டு கொண்டாடும் விதமாக JCI மணவை கிங்ஸ் சார்பில் வருடத்தில் முதல் நாள் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள அனைத்து உள்நோயாளிகளுக்கு பால், பிரட் ஹார்லீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை அரசு மருத்துவர் திரு.ராஜராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் தலைவர் ஜெயம்சக்திவேல், திட்ட தலைவர் ஆதிசிவன் பிரபு, திட்ட இயக்குனர் ராஜா, உடனடி முன்னாள் தலைவரும் மண்டல இயக்குனர் வழக்கறிஞர் முல்லைசந்திரசேகர், செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஜெயபால், சாசனதலைவர் கனேஷ்ராஜா, முன்னாள் தலைவர் துளசிமணி, ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் சீமாசாகுல், ராமநாதன், ஜோசப்ராஜ், அழகர், நாதன், கண்ணன், கனகராஜ், இளையபெருமாள், ஜெயபிரகாஷ், தீபநவீன், தினேஷ், பரமசிவம், அழகேஸ்வரன், ஆனந்த், மதன்ராஜ், நந்தகோபால், ஸ்டாலின் பிரபு மற்றும் JCI மணவை கிங்ஸ் உறுப்பினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment