இவ் விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் தங்கமணி தலைமை வகித்தார் ஜான் பீட்டர் பசீர் சந்திரமோகன் சேவியர் மதி சங்கரலிங்கம் ராதாகிருஷ்ணன் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் எழுத்தாளர் ஆய்வாளர் கவிஞர் ஜீவபாரதிக்கு இஸ்கப் மாநில தலைவர் சௌமியா ராஜரத்தினம் ஜீவா விருதினை வழங்கி உரை நிகழ்த்தினார்.
கவிஞர் இந்திரஜித் உரைநடை கவிதையில் எழுதிய ஜீவா வாழ்க்கை வரலாறு நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர் டாக்டர் தா.அறம் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். மேலும் இளைஞர்களுக்கான தலைமை பண்பு விருதினை பாரதி கனகராஜுக்கும் நல்லாசிரியர் விருதினை ஜேம்ஸ் ராமசாமி சேசுராஜ், சிறந்த பன்முக கலைஞர் விருதினை தையலர் பாலன் சிற்பக் கலைஞர் விருதினை பங்கிராஜ்க்கும் இளம் சிலம்ப வீராங்கனைவிருதினை கதம்பரிக்கும் மனிதநேய பண்பாளர் விருதினை இப்ராஹிமுக்கும் தேசபக்தர் விருதினை சலவை தொழிலாளர் பெரியசாமிக்கும் அகவை முதிர்ந்த பாவலர் விருதினை புலவர் ராஜேந்திர பெருமாளுக்கும் நாட்டுப்புற கலைஞர் விருதினை ராமையாவுக்கும் நாடகக் கலைஞர் விருதினை டி ஆர் ஜெயலட்சுமி கிருஷ்ணப்பா ஆகியோருக்கு நகர்மன்றத் தலைவர் கீதா மைக்கேல்ராஜ் தி.ஆலை பள்ளி தலைமை ஆசிரியர் அருளரசன் நல்லாசிரியர் அன்புராஜ் இஸ்கப் மாநில பொருளாளர் கோட்டியப்பன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் கலியமூர்த்தி மனோன்மணி இஸ்கப் பாலசுப்பிரமணியன் எழுத்தாளர் ஜகஹர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.

இஸ்கப் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் பக்ரிசாமி வழக்கறிஞர் தமிழ்மணி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள், தாமரை இதழ் ஆசிரியர் சி. மகேந்திரன் சிறப்பு நிகழ்ச்சி ஜியோ வாழ்க்கை வரலாறு நூல் எழுதிய இந்திரஜித் ஜீவா விருது பெற்ற ஜீவ பாரதி ஆகியோர் ஏர் உரை நிகழ்த்தினார்.
பழனிச்சாமி ஜனசக்தி உசேன் தங்கராசு ராஜேந்திரன் சுப்ரமணியன் நல்லுச்சாமி ராகமத்துனிஷா ரவிச்சந்திரன் வெள்ளத்துரை கல்யாணசுந்தரம் மரியராஜ் சின்னத்துரை உட்பட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தாலுக்கா மாவட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment