வட்டாச்சியர் அலுவலக வளாகத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 January 2023

வட்டாச்சியர் அலுவலக வளாகத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் CPI(ML) சார்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வட்டாச்சியர் அலுவலகத்திற்குள் சார்நிலை கருவூலம், கிளைச்சிறை, சார்பதிவாளர் அலுவலகம், சட்டம் ஒழுங்கு காவல்நிலையம், மகளிர் காவல்நிலையம், போக்குவரத்து காவல்நிலையம், வட்ட வழங்கல் அலுவலகம் என அன்றாட வட்டாச்சியர் வளாகத்திற்குள் பொதுமக்கள் 1000கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இங்கு பொதுகழிப்பிடம், பொதுமக்கள் ஓய்வறை, குடிநீர் வசதி ஆகியவை இருந்தும் செயல்படாமல் இருக்கின்றன. மேற்கண்ட கோரிக்கைகளுக்காக CPI(ML) சார்பாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கபட்டது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 12-1-2023 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் CPI(ML) கட்சி சார்பாக வட்டாச்சியர் அலுவலத்தில் வட்டாச்சியர் வெளியில் சென்ற காரணத்தினால் நகர செயலாளர் பி.பாலு தலைமையில் நகரகுழு உறுப்பினர் மெக் S. இளையராஜா முன்னிலையில் துணை வட்டாச்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கபட்டது. 


சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ்.ராஜ்குமார், மாவட்டகுழு உறுப்பினர்கள்  ஆவா, இளையராஜா, கே.மாசிலாமணி, ஜெ.அந்தோனியம்மாள், கலந்துகொண்டனர், நிகழ்வில் நகரகுழு உறுப்பினர்கள் M.முருகேசன், D. நித்திஷ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் எஸ்.ரேணுகா பி.பெருமாள், மீனா, வழக்கறிஞர், தினேஷ் ஆனந்த், AlCCTU தலைவர் வெள்ளைச்சாமி மற்றும். தோழர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் உடனே நிறைவேற்றபட வேண்டும். நிறைவேற்றாத பட்சத்தில் CPI(ML) கட்சி போராட்டம் நடத்தப்படும் என்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad