திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் மணப்பாறை, தூய அந்திரேயா மேல்நிலைப் பள்ளியில் "கல்வியின் முக்கியத்துவம்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிக்ச்சிக்கு தூய அந்திரேயா மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி. குணசேகரன் தலைமையுரை ஆற்றினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர் இரா. பிரசாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இரா. பிரசாத் பல்வேறு விருதுகளை பெற்றவர், விழிப்புணர்வு பேச்சாளர், வணிக பயிற்சியாளர் போன்ற திறன்களை கொண்டவர், மேலும் இவர், மூக்கின் நாசில் வழியாக 52 வினாடிகளில் தேசிய கீதம் பாடி புதிய உலக சாதனையை படைத்தவர் ஆவார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப் பணித்துறை முதலாமாண்டு மாணவி பெ. உலகேஸ்வரி இந்நிக்ச்சியை தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment