மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் - மதிமுக வலியுறுத்தல். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 10 March 2023

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் - மதிமுக வலியுறுத்தல்.

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும், என ஜோதிமணி கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்  தொலைபேசியில் வலியுறுத்தினார்.

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். இன்று திருச்சியில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் இதை தாங்கள் வலியுறுத்த வேண்டும் என மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம்  வாட்ச் ஆப் வாயிலாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோதிமணி MP-யிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதனைத் தொடர்ந்து இன்று காலை எம்.பி.ஜோதிமணி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.


அப்போது, மணப்பாறையில் ஜனவரி 30-ஆம் நாள் மறுமலர்ச்சி திமுக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய மறியல் போராட்டத்தை விளக்கினார். மேலும், மதிமுக பொதுசெயலாளர் வை.கோ. தலைமைக் கழகச்செயலாளர்  துரை வைகோ-விடம் இருந்து அறிக்கை வாயிலாக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததையும் கூறினார்.


ஆம், நானும் இந்தப் போராட்டத்தை அறிந்தேன். மதிமுக பொதுசெயலாளர் வை.கோ.தந்தஅறிக்கையையும் படித்தேன்.ஏற்கனவே, ரயில்வே துறைக்கு நான் மனு அனுப்பியுள்ளேன் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டுகின்றனர் என்றார்.


அப்படி என்றால் இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றேன்.அதற்கு அந்தப் போராட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என மாவட்டச் செயலாளர் மணவைதமிழ்மாணிக்கத்திடம் எம்.பி.ஜோதிமணி  தெரிவித்துள்ளார்.அவருக்கு கால் வலி காரணமாக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உரிய வழியில் உங்கள் மனுவை ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad