திமுக கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாவிற்கு வருகை புரிந்த கே.என் அருண் நேரு-விற்கு உற்சாக வரவேற்பு. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 March 2023

திமுக கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாவிற்கு வருகை புரிந்த கே.என் அருண் நேரு-விற்கு உற்சாக வரவேற்பு.

மணப்பாறை அடுத்த செவக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாவிற்கு வருகை புரிந்த கே.என் அருண் நேரு-விற்கு ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் மணப்பாறையில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் முனாப் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் வெடி வெடித்து தாரை தப்பட்டை முழுங்க பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் அரசு அதிகாரிகள்  தரைக்கடைகளை அப்புறப்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை  கேள்விக்குறியாக்கி வருவதாக தரைக்கடை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.இது குறித்து பேசிய அருண் நேரு உங்களின் கோரிக்கை குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசுகிறேன் கோரிக்கையை மனுவாக அளியுங்கள் என கூறிச்சென்றார்.


இந்நிகழ்வில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ராஜலட்சுமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பாலா, ஜோதி தர்மராஜ், ஆட்டோ ரகுமான், தொழிலதிபர் சித்ரலேகா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- திருச்சி மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad