திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் துவக்கி வைத்தார் - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 April 2023

திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் துவக்கி வைத்தார்


பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் அவர்களின் வழிகாட்டுதல்படியும்,  ஸ்ரீமதி இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் செயலாளர் முனைவர் மீனா குஞ்சிதபாதம் அவர்களின் ஆலோசனைபடியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 12.04.2023 அன்று கல்லூரியின் வித்யா சேவா ரத்னம் கே.சந்தானம் அரங்கில் மாபெரும்  ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரியின் செயலர் முனைவர்  கோ. மீனா அவர்கள் தலைமை வகித்தார். 


தலைமை  செயல் அதிகாரி ஸ்ரீ. கு.சந்திரசேகரன் MS., மற்றும் இயக்குநர் திருமதி S.அபர்ணா MBA.,M.Phil., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் பு.கெஜலட்சுமி,  மற்றும் துணை முதல்வர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் M.செல்வம்  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  ரத்த தான முகாமைத்  துவக்கி வைத்தார்.


இந்த முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பு.கெஜலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தலைமை  செயல் அதிகாரி ஸ்ரீ. கு.சந்திரசேகரன் MS., அவர்கள் தலைமையுரை ஆற்றினார். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்  அவர்கள் சிறப்புரையாற்றினார். அதனையடுத்து அவர் கல்லூரியின் வகுப்பறைகளைப் பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக  யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்  முனைவர். கி .வெற்றிவேல், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் செயலாளரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் தலைவருமான இன்ஜினியர் ராஜசேகர், திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் தமிழ் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் குணசேகரன், ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.


திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு ரத்த வங்கி அலுவலர் மருத்துவர். .டி.விஷ்ணு பிரதாப் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் தன்னார்வலர்களிடம் இருந்து ரத்த வகைகளைச் சேகரித்தனர். இந்த மாபெரும் இரத்த தான முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த  இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் சுமார் 110  பேர்,  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad