உப்பிலியபுரம் ஒன்றியம் மாராடி கிராமத்தில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 132 ஆவது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 April 2023

உப்பிலியபுரம் ஒன்றியம் மாராடி கிராமத்தில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 132 ஆவது பிறந்தநாள் விழா.


திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் மாராடி கிராமத்தில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் 132 ஆவது பிறந்தநாள் விழா.



உப்பிலியபுரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட மாரடி கிராமத்தில் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா மேளதாளம், அம்பேத்கர் சிலைக்கு பாலாபிஷேகம், பெண்களின் முளைப்பாரி ஊர்வலம், சைவ அசைவ உணவுடன் அன்னதானம் ஆகியவைகளுடன் கோலாகலமாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா அனைத்து சமுதாய மக்களாலும் மற்றும் அனைத்து கட்சியினராலும் ஆசிரிய பெருமக்களாலும், இளைஞர்களாலும் கொண்டாடப்பட்டது.



நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் நகரமன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்பாளர் கஸ்டமஸ் மகாலிங்கம், துறையூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் எம். வீரபத்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன் (வடக்கு) அசோகன் (தெற்கு), மற்றும் திராவிட முன்னேற்ற துறையூர் உப்பிலியபுரம் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து புகழ் வணக்கம் செலுத்தினர்.


- துறையூர் செய்தியாளர் கா.மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad