உப்பிலியபுரம் பாஜக கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 April 2023

உப்பிலியபுரம் பாஜக கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் மாராடியில் பாஜக கட்சியின் தெற்கு மண்டல் சார்பாக டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட பட்டியல் இன தலைவர் ஏகே சங்கர், மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் ஆகியோர் தலைமை வகித்தனர். தெற்கு மண்டல தலைவர் கே முருகேசன் முன்னிலை வகித்தார். மற்றும் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் வி.என்.டி.சம்பத்குமார், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார், தெற்கு ஒன்றியம் பட்டியல் அணி ஒன்றியத் தலைவர் பி சங்கர், ஒன்றிய துணைத் தலைவர் செந்தில்நாதன், ஒன்றிய பொதுச் செயலாளர் என். ரவீந்திரன்,  மனோஜ், மாவட்ட துணைத் தலைவர் நித்யா ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் சத்யாஅஸ்வினி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் மாராடி நடராஜன், ஒன்றிய துணைத் தலைவர் சாந்தி, ஒன்றிய செயலாளர் கௌதமி, மாவட்ட பொதுச் செயலாளர் பட்டியல் அணி சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ மனோகரன், விவசாய அணி ஒன்றிய தலைவர் மோகன் ஒன்றிய துணைத் தலைவர் கமலஹாசன், கிளைத்தலைவர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


- துறையூர் செய்தியாளர் கா.மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad