திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாமானிய மக்கள் நல கட்சியின் நிறுவனத் தலைவர் குணசேகரன் தலைமையில் முறையாக கிராம சபை கூட்டத்தை நடத்தாத தமிழக அரசின் உள்ளாட்சி துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான முறையான அனுமதி காவல்துறையினரிடம் பெறாததால் ஆர்ப்பாட்டம் நடத்திய சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment