இதே நாளில் ஜம்புநாதபுரம் காவல் நிலைக்கு உட்பட்ட பொன்னுசங்கம்பட்டி அய்யாறு பாலத்திற்கு அடியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஜம்புநாதபுரம் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் அவர் எந்த ஊர் கொலையா தற்கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் இரண்டு ஆண் சடலம் முகங்கள் சிதைந்த நிலையில் கிடந்தது திருச்சி மாவட்டத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவ இடங்களுக்கு முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், ஆகியோர் நேரில் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
- துறையூர் செய்தியாளர் கா. மணிவண்ணன்

No comments:
Post a Comment