திருச்சி மாவட்டம், மாணப்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மேல்நிலை பாடத்தில் மணப்பாறை சார்ந்த பள்ளி மாணவி R.அன்பரசி அரசுப்பள்ளியில் முதல் இடம் பிடித்தார். தொழிற்கல்வி பிரிவில் மொத்த மதிப்பெண் 600க்கு 553 மதிப்பெண்கள் எடுத்தார்.

இவர் தந்தை பெயர் இராவிச்சந்திரன். தாய் பெயர் முத்துமாரி, நடுநிலையான குடும்பத்தை சேர்ந்தவர, இவர் தந்தை நியுட்ரிசன் சென்டர் நடத்தி வருகிறார், இதேபள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் S மேனகா, பிரிவில் 600க்கு 531 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இவர் தந்தை பெயர் சண்முகநாதன், தாய்பெயர் சுந்தரவந்தி. இவரின் தந்தை வாரியத்தில் உதவியாளராக வேலை செய்கிறார். இது அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி, இது குறித்து அவர்களிடம் கேட்ட பொழுது தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம் என்றார்கள்.
No comments:
Post a Comment