துறையூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 11 May 2023

துறையூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.


திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் புலிவலம் காவல் எல்லைக்கு உட்பட்ட தவிட்டுப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் நாகராஜன் இவரது மகள் கிருத்திகா கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தவர் அரசு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். அரசு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் கடந்த 08-05-23 அன்று வெளியானதில் கிருத்திகா மதிப்பெண்கள் குறைவாக பெற்றதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புலிவலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச் சம்பவம் குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சமூக வலைதளங்கள், சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பள்ளி மாணவிகள் எந்த விதத்திலும் தங்கள் மதிப்பெண்கள் குறைந்து இருந்தாலோ அல்லது பொது தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலோ தவறான முடிவுகளுக்கு உள்ளாக வேண்டாம் என ஊடகங்களில் வாயிலாக எவ்வளவோ வேண்டுகோள் வைத்தனர். 

அப்படி இருந்தும் இதுபோன்று எதிர்பாராத வித சம்பவம் பெற்றோருக்கு மட்டுமல்ல செய்தியை கேள்விப்படும் அனைவருக்கும் மிகுந்த சோகத்தையும் வருத்தத்தையும் உண்டாக்குகிறது. முன்பொரு காலத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்தால் ஒரு வருடம் காத்திருக்க கூடிய சூழல் இருந்தது ஆனால் தமிழக அரசு அதை மாற்றி தோல்வி அடைந்தவர்கள் உடனடியாக துணைத் தேர்வு எழுதி வெற்றியடைந்து கல்லூரிக்கு செல்லலாம் என்ற நிலையை உருவாக்கி எத்தனையோ மாணவ மாணவிகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. 


இருந்தாலும் மாணவ மாணவிகள் ஏன் இப்படி ஒரு முடிவினை எடுக்கிறார்கள்?அரசு மற்றும் பெற்றோர் இன்னும் கூடுதலான விழிப்புணர்வுகளை  ஏற்படுத்த வேண்டும் இனி ஒரு காலத்தில் தோல்வி  மற்றும் மதிப்பெண் குறைவினால் எந்த ஒரு உயிரும் பலியாக கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


- கா.மணிவண்ணன் செய்தியாளர் துறையூர் 

No comments:

Post a Comment

Post Top Ad