மனுவில் அளித்த விவரங்கள் வருமாறு.. நான் மேற்கண்ட முகவரியில் வசித்துக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன். நான் குடியிருக்கும் ஏரகுடி தெற்கு பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம் மேற்படி 150 குடும்ப பொதுமக்களும் ஏரகுடி கிராம சர்வே எண் 128 பார் 10 ஏ 11 ஏ 12ஏ மற்றும் 132 ஆகிய சர்வே எண்களில் உள்ள வண்டி பாதையில் கடந்த மூன்று தலைமுறைகளாக மேற்படி நாங்களும் சுமார் 150 அரிஜன குடும்ப பொதுமக்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் மற்றும் ஆடு மாடுகளை ஓட்டிச் சென்று அனுபவம் செய்து வருகிறோம். மேலும் மேற்படி வண்டி பாதையில் தான் ஏரகுடி பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் பைப் லைன் பதித்து மேற்கண்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது.

மூன்று தலைமுறைகளாக எவ்வித இடையூறும் இன்றி அனுபவம் செய்து வருகிறோம். தற்சமயம் மேற்படி வண்டி பாதையில் மேற்கண்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருவதை தடுக்கும் விதமாக சிக்ககவுண்டர் என்பவரின் மகன் சுப்பிரமணியன் என்பவர் எரகுடி கிராம சர்வே எண் 128/10ஏ என்ற சர்வே எண்ணில் உள்ள பொது வண்டி பாதையை மட்டும் 17 4 2023ஆம் தேதி மாலை சுமார் 3:30 மணியளவில் ஜேசிபி இயந்திரம் மூலம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் பள்ளம் தோண்டி அழித்து சேதப்படுத்திவிட்டார். இது சம்பந்தமாக நானும் அருகில் வசிப்பவர்களும் கேட்டதற்கு நான் அப்படித்தான் சேதப்படுத்துவேன் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று திமிராக பேசியதில் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு விடும் என்று கருதி நாங்கள் அந்த இடத்தை விட்டு வந்து விட்டோம் எனவே வட்டாட்சியர் அவர்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த மேற்படி எரகுடி கிராம சர்வே எண் 128/10ஏ இல் உள்ள பொது வண்டி பாதையை மீண்டும் புதுப்பித்து பொதுமக்கள் பயன்படுத்த ஆவண செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் தெரிவித்து இருக்கிறார்.
மனுவனைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் வனஜா மனுவினை பரிசீலித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
- கா.மணிவண்ணன், செய்தியாளர் துறையூர்.
No comments:
Post a Comment