திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் கீழத்தெருவைச்சேர்ந்த தங்கவேல் மகன் தங்கதுரை (எ) பெரியசாமி (42) இவர் தேர் கட்டும் பணி செய்து வருவதாக தகவல்.11-05-23 அன்று மாலை 6 மணி அளவில் இவர் தேர் கட்டிக் கொண்டிருக்கும் பணியின் போது மேற்கண்ட ஊர் பாலன் மகன் மனோகர்(48).இவர் மது போதையில் ஏன்டா 600 ரூபாய் வரி போடுறீங்க என தங்கதுரை மற்றும் அருகிலிருந்தவர்களிடம் கேட்டு வாய்த்தகராறு செய்ததில் தகறாரு முற்றியதில் அருகில் மூங்கில் கட்டை எடுத்து தங்கதுரையின் தலையில் மனோகர் பலமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தங்கதுரை துறையூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தங்கதுரை அளித்த புகாரின் படி விசாரணையில் மனோகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கா.மணிவண்ணன் செய்தியாளர் துறையூர்.
No comments:
Post a Comment