முன்னாள் முதல்வர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா அதிமுகவினரால் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றியம் சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் சி. வெங்கடேசன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக துறையூரில் உள்ள தென்திருப்பதி பெருமாள் மலை கோவிலில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வேண்டும் என வேண்டி அபிஷேகம் செய்தும், மேலும் பெருமாள் மலை அடிவாரத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர் வேம்பு ரெங்கராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், முன்னாள் சேர்மன் மனோகரன், அவை தலைவர் செங்கை ரவி, பொருளாளர் ராம்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சொரத்தூர் ரமேஷ்,பாலசுப்ரமணியன் பாசறை ஒன்றிய செயலாளர் ஆதனூர் செல்வராஜு, மாணவரணி ஒன்றிய செயலாளர் சிவசாந் மனோகரன், துணை செயலாளர் சரவணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் சொரத்தூர் நாகராஜன், அம்மாபட்டி பாஸ்கர் மற்றும் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள்,. பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
- கா.மணிவண்ணன் செய்தியாளர் துறையூர்.
No comments:
Post a Comment