முகாமிற்கு தலைவர் டி ஞானசேகரன் தலைமை வகித்தார் செயலாளர் டி. மூர்த்தி, பொருளாளர் டி எம் செந்தில், சங்க சேவை திட்ட இயக்குனர் கே.கதிரவன் மற்றும் முன்னாள் தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் கார்த்திகேயன் ரமேஷ் மணிஷ் சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமிற்கு துறையூர் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து சுமார் 250 க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டு கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்களிடம் கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனை செய்து கொண்டவர்களில் அறுவை சிகிச்சைக்காக சுமார் 110க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை கோயம்புத்தூர் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முற்றிலும் இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு என். நடராஜன் நினைவு அறக்கட்டளை சார்பில் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
- துறையூர் செய்தியாளர் கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment