திருச்சி மாவட்டம் துறையூர் பழைய பாரதி திரையரங்கம் சாலையில் புதிதாக துவக்கப்பட்டு இருக்கும் வி.கே கிளினிக் மருத்துவமனையை தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.மேலும் அன்னையர் தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் நடைபெறும் சிறப்பு ரத்த சோகை,நீரழிவு, ரத்த கொதிப்பு கண்டறிதல் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாமினையும் துவக்கி வைத்து ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவச மருந்துகளையும் வழங்கினார்.
நிகழ்விற்கு துறையூர் அன்னை மருத்துவமனை மருத்துவர் விஜயகுமார் தலைமை வகித்தார். விகே கிளினிக் மருத்துவர்கள் எஸ்.விக்னேஸ்வரன், கே.லோகேஸ்வரி, பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

துறையூர் மாநகருக்கு வருகை புரிந்த வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்களை வனத்துறையினர் காவல்துறையினர் வரவேற்றனர். மேலும் துறையூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர். கலந்து கொண்ட அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார் வி கே கிளினிக் மருத்துவர் விக்னேஸ்வரன்.
- கா.மணிவண்ணன் செய்தியாளர் துறையூர்.
No comments:
Post a Comment