துறையூர் இமயம் கல்லூரியில் நடப்பது என்ன?மாணவர்கள் கொந்தளிப்பு போராட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூரில் இயங்கி வரும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 14-05-23 அன்று மதியம் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கல்லூரி விடுதியில் உணவில் பல்லி விழுந்த உணவினை சாப்பிட்ட சுமார் 42 மாணவ மாணவியர் வாந்தி மயக்கம் வயிற்று வலியால் அவதியுற்றதை கண்ட சக மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் மற்றும் பல்வேறு குறைகள் களைய கோரிக்கைகளோடு கல்லூரி மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து கல்லூரி நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஷ்மின், துறையூர் வட்டாட்சியர் வனஜா, காவல் ஆய்வாளர்கள் துறையூர் செந்தில்குமார், முசிறி செந்தில்குமார், ஜம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் நேரில் வருகை புரிந்தனர்.
முசிறி டிஸ்பி யாஷ்மின் மாணவர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களுக்கு போராட்டம் என்பது தீர்வல்ல எதையும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் நம்மளை கஷ்டபட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு நாம் நம்பிக்கையை தரவேண்டும்.நமது எதிர் காலம் கல்லூரியிலிருந்து தான் தொடங்குகிறது ஆதலால் கல்லூரி நிர்வாகத்திற்க்கு நாம் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். டிஎஸ்பி யின் அறிவுரைகள் மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை வரச் செய்ததால் மாணவர்கள் மிகுந்த சந்தோசம் அடைந்தனர்.மேலும் மாணவர்களின் குறைகளை களையச்செய்து கோரிக்கைகளை கல்லூரி நிர்வாகத்திடம் பேசி விரைவில் நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார் டிஸ்பி யாஸ்மின்.

கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள், விடுதியில் உணவுக்கான கட்டணத் தொகை செலுத்தியும் தரமான உணவை கல்லூரி நிர்வாகம் வழங்குவதில்லை என்றும் மேலும் விடுதியில் கொசு வலை இல்லாததால் கொசு மற்றும் விஷ ஜந்துக்களால் மிகவும் அவதிப்படுவதாகவும் மேலும் கல்லூரி நிர்வாகத்தின் குறைபாடுகளை வெளியில் சொன்னால் எங்களை கார்னர் செய்து எங்களுடைய கல்வியின் தரத்தை குறைத்து விடுகிறார்கள் ஆதலால் நாங்கள் வெளியில் சொல்வதில்லை பொறுக்கமுடியாமல் தான் தற்பொழுது கல்லூரி வளாகத்தில் போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம் இதுபோல் பல நாட்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது இந்த அவலங்கள் எல்லாம் மாறவேண்டும்.எங்களுக்குப்பிறகு இக்கல்லூரிக்கு பயில வரும் மாணவச்செல்வங்கள் எந்தக்குறையும் இல்லாம் படிக்கவும் இந்தப்போராட்டம் வழிவகுக்கும் என மனம் பொங்கி வேறு வழியில்லாமல் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறோம் என கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறை வருவாய்த்துறை அனைவரும் கலந்து பேசியதில் இனி எந்த ஒரு தவறும் தெரிந்தோ தெரியாமலோ நடைபெறாது என உறுதி அளித்த பின் மாணவர்கள் கல்லூரிக்கு கலைந்து சென்றனர்.மேலும்
கல்லூரி நிர்வாகத்திடமிருந்து இருந்து வந்த தகவல் படி மாணவர்களுக்கு எந்த குறையும் நாங்கள் இதுவரை வைத்ததில்லை ஏதோ தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் சிறு சிறு குறைகளை நாங்கள் அகற்றி வருகிறோம்.
இருந்தாலும் ஒரு சில மாணவர்கள் தூண்டுதலால் எதிர்பாரா விதமாக மாணவர்கள் இப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது. நாங்கள் உணவின் தரத்தை ஒருபோதும் குறைத்ததில்லை ஏதோ மாணவர்களுக்குள் சில தவறுகள் நடப்பதாக தெரிகிறது அதையும் நாங்கள் இனி கண்காணிக்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்துகிறோம் இதுபோன்று சம்பவங்கள் இனி நடக்காமலும் பார்த்துக் கொள்கிறோம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
கா.மணிவண்ணன்
செய்தியாளர்
துறையூர்
No comments:
Post a Comment