ஆர்ஆர்ஆர் மையத்தின் விளக்கம் பின்வருமாறு;- Reduce (கழிவுகளைகுறைத்தல்). Reuse(தேவையற்ற பொருட்களை மறுபயன்பாட்டிற்க்கு பயன்படுத்துதல்). Recycle (கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்).துறையூர் நகராட்சியின் ஓர் புதிய முயற்சியாக இம்மையங்களை துறையூர் வார்டுக்கு உட்பட்ட சுமார் 18 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.பொதுமக்கள் தங்களது பயன்படுத்திய மற்றவர்களுக்கு தேவைப்படும் உபயோகமான மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிகள்,செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆர் ஆர் ஆர் மையத்தில் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என நகராட்சி துறையினர் தெரிவித்தனர்.

இம்மையங்களில் பொதுமக்கள் முன்வந்து மற்றவர்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை வழங்குவதினால் நகரத்தில் தேவையற்ற கழிவுகள் பெருகாமலும் உருவாகாமலும் நகரத்தின் தூய்மை குறையாமலும் இருந்திடும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்தார். பொதுமக்கள் நகராட்சியோடு ஒத்துழைப்பு கொடுப்பதில் "நமது நகரம் நமது தூய்மை என்ற பெருமை நமக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முத்து முகமது, திட்ட ஒருங்கிணைப்பாளர் சௌம்யா,துறையூர் ஜேசிஐ அமைப்பின் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் திருமூர்த்தி, உறுப்பினர் வாசுதுரைராஜ் மற்றும் துறையூர் ஓம் சக்தி திருநங்கை சுய உதவி குழுவினரின் தலைவர் சமூக ஆர்வலர் லாவண்யா, துணைத் தலைவர் ப்ரியா மற்றும் நகராட்சி துறையினர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆர் ஆர் ஆர் மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டு நகர் மன்ற தலைவர் மேலும் பொதுமக்களுக்கு தெரிவித்த வகையில் இம்மையம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதேவேளை நகரின் தூய்மையை மேலும் மேம்படுத்தவும் உதவும் என தெரிவித்தார். நகராட்சியின் புதிய முயற்சியின் அடித்தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர உழைத்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
சுகாதார அலுவலர் விஜயகுமார் ஆய்வாளர் முத்து முகமது தெரிவிக்கையில் இப்புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு மற்றும் உதவி புரிந்த ஜேசிஐஅமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நகராட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
- கா.மணிவண்ணன் செய்தியாளர் துறையூர்.
No comments:
Post a Comment