பின்பு புளியஞ்சோலையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் அசோகன் உரையாற்றியதாவது, தனது பிறந்தநாள் விழா என்பது கொண்டாடப்படுவதற்காக அல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரங்களை மேலும் வலுப்படுத்தவும் மலைக்கோட்டை மன்னவர் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும் எனது தந்தையின் அபிமானிகளை நேரில் சந்திக்கவும் தந்தையின் வழியில் எனக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் எனது ஆதரவாளர்களாகிய தங்களை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் எனது பிறந்தநாள் நிகழ்ச்சி பயன்படும் என இந்த பிறந்தநாள் விழாவை நான் கொண்டாடுவதற்கு சரி என்றேன். மேலும் நான் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று வரும் முதல் பிறந்தநாள் விழாவாக இருப்பதாலும் இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்.
பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதை போல் மக்களை சந்திப்போம் மக்களோடு மக்களாக இருப்போம் மக்களுக்கு வேண்டிய நல் உதவிகளை செய்வோம் மக்கள் தான் நமது மூச்சு என்று இருப்போம் என அவ்வழியில் நானும் செல்லவே கடமைப்பட்டிருக்கிறேன். ஆதலால் எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனக்கு ஆதரவளித்ததற்கும் அளித்துக் கொண்டு இருப்பதற்கும் மாபெரும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய மலைக்கோட்டை மன்னவர் அமைச்சர் பெருமகனாருக்கும் மாவட்ட செயலாளர் அண்ணன் காடுவெட்டி ந.தியாகராஜன் அவர்களுக்கும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் அவர்களுக்கும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன்ராஜேந்திரன், நகர்மன்ற துணைத்தலைவர் ந.முரளி அவர்களுக்கும்,கழக முன்னோடி அய்யா தமிழ்மாறன் அவர்களுக்கும்,எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தெற்கு வடக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் எனது இரு கரம் கூப்பி வணங்கி மாபெரும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் ஒன்றிய செயலாளர் அசோகன்.
நிகழ்வில் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்தார் ஒன்றிய செயலாளர் அசோகன்.
- செய்தியாளர் கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment