மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் ஆறுதல். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 May 2023

மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் ஆறுதல்.


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது நரசிங்கபுரம். இவ்வூர் பச்சமலை அடிவாரப்பகுதியாகும்.இவ்வூரில் மணல் கடத்துவதாக வட்டாட்சியர் வனஜா அவர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை  நேரில் சென்று ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்டதன் பேரில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் 27 5 2022 அன்று இரவு 10 மணியளவில் நரசிங்கபுரம் சென்று மணல் கடத்தல் காரர்களை கையும் களவுமாக பிடித்ததில் கடத்தல் காரர்களின் தாக்குதலுக்கு உள்ளானார் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன். 

இச்சம்பவம் நரசிங்கபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சமூக ஊடகங்கள் மூலமாக வைரலானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று வருவாய் ஆய்வாளரை கடத்தல் காரர்களிடமிருந்து காப்பாற்றி துறையூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரபாகரனை அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய மணல் கடத்தல் காரர்கள் தனபால், மணி, கந்தசாமி ஆகியோர் தப்பி ஓடியதாக தகவல். இச்சம்பவத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.


இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் 28 5 2023 அன்று காலை 11 மணியளவில் துறையூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் விரைந்து வந்து தாக்குதலுக்கு உள்ளான வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை சந்தித்து ஆறுதல் கூறி விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்தார்.


மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவின் பெயரில் துறையூர் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் காவல்துறையினர்  தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து பிடித்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் துறையூர் பகுதியிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


- செய்தியாளர் கா.மணிவண்ணன்.

No comments:

Post a Comment

Post Top Ad