திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நரசிங்கபுரத்தில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், மற்றும் மணி என்கிற மணிகண்டன், தனபால், கந்தசாமி ஆகிய நால்வர் மீதும் கொலை வழக்கு பதிந்து விட வேண்டும், அவர்களை சாதாரண வழக்குகளில் கைது செய்தது போதாது கொலை வழக்கு உள்ளிட்ட கடுமையான வழக்குகள் பதிய வேண்டும் மேலும் துறையூர் பகுதிகளில் நடந்து வரும் மணல் கொள்ளையை உடனடியாக தடுத்திட வேண்டும், குற்றங்களை தடுக்க செல்லும் அரசு அதிகாரிகளின் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து விட வேண்டும் போன்ற கோஷங்களோடு பாஜக வடக்கு மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் துறையூர் பாஜகவினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு 29 5 2023 மாலை 6 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவத்தால் துறையூர் பேருந்து நிலையம் பகுதி பரபரப்புக்கு உள்ளானது.
- செய்தியாளர் கா.மணிவண்ணன்.
No comments:
Post a Comment