அதுசமயம் தமிழ்நாடு எங்கும் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருந்த நேரம் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்து காரணமாக அரசு விழாக்கள் மற்றும் கலைஞர் பிறந்தநாள் விழா ஆகியவை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கொண்டாட்டங்களை தவிர்த்து மிக எளிமையான முறையில் மாவட்ட திமுக பொருளாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான தர்மன் ராஜேந்திரன் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாளில் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.
முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் அகால மரணம் அடைந்தவர்களுக்கு துறையூர் திமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் துறையூர் திமுக நகரச் செயலாளர் மெடிக்கல் ந.முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், நீர்ப் பாசன விவசாய சங்க தலைவர் கஸ்டமஸ் மகாலிங்கம், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ.சரவணன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தர்மன் விஜய், துறையூர் நகர துணைச்செயலாளர்கள் இளங்கோவன், பிரபு, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், ரெங்கநாதபுரம் கார்த்திகேயன், திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், வீரமணிகண்டன், அம்மன் பாபு, செந்தில்குமார், ஜானகிராமன், மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் வழக்கறிஞர் முகமது ரபீக், மத்திய ஒன்றிய துணைச்செயலாளர் அன்பு காந்தி, நரசிங்கபுரம் கிளைச் செயலாளர் தளபதி கதிரேசன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் என ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் கா.மணிவண்ணன் துறையூர்
No comments:
Post a Comment