கடத்தல் காரர்கள் ஒருவர் வருவாய் ஆய்வாளர் கழுத்தைப் பிடித்து கடித்தும் உள்ளார் இச்சம்பவத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனும் சம்பந்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் கண்ட கிராம பொதுமக்கள் வருவாய் ஆய்வாளரை காப்பாற்றி அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்து பின்பு துறையூர் அரசு தலைமை பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இத்தகவல் அறிந்த துறையூர் வட்டாட்சியர் வனஜா மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வருவாய் ஆய்வாளர் பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை மேற்கொண்டதில் வருவாய் ஆய்வாளரை தாக்கியதாக தனபால் மணி கந்தசாமி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் துறையூர் அரசு பொது மருத்துவமனைக்கு வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை நேரில் 28-05-23அன்றுநேரில் சந்திக்க வந்த மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவில் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமையில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் காவல்துறையினர் விரைந்து நால்வரையும் 28- 5- 2023 மாலைக்குள் கைது செய்தனர்.
இவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தாக்குதல் போன்ற ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் இச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது துறையூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஊராட்சி தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல்.
- செய்தியாளர் கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment