துறையூர் நகராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் ஓராண்டு சாதனை சிறப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 June 2023

துறையூர் நகராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் ஓராண்டு சாதனை சிறப்பு நிகழ்ச்சி.


திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை நகரங்களுக்கான ஓராண்டு நிறைவு சாதனை சிறப்பு நிகழ்ச்சி துறையூர் தெப்பக்குளம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத் தலைவர் மெடிக்கல் ந.முரளி தலைமையில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறந்த தூய்மை பணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்களை கௌரவித்தல் தூய்மைக்கான விழிப்புணர்வுகள், சிறப்பு தூய்மை பணிகள் மற்றும் சிறந்த குடியிருப்பு நல சங்கத்தை பாராட்டுதல், சிறந்த முறையில் கழிவுகளை தரம் பிரித்து வழங்கும் இல்லத்தரசிகளை கௌரவித்தல், மற்றும் சான்றிதழ் வழங்குதல், நீர் நிலைகளை சுத்தம் செய்தல்,  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல், மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் மிக சிறப்பான முறையில் நடைபெற்றன.



பாராட்டு மற்றும் சான்றிதழ்களை நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர், ஆணையர் (பொறுப்பு)நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் சுகாதார அலுவலர் விஜயகுமார்,சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது ஆகியோர். நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், சுமதி, நித்யா, ஹேமா, முத்து மாங்கனி, என்.சந்திரா ஆகிய நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் சௌமியா, தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் கோவிந்தராஜ்,மணி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் களப்பணியில் இருந்தனர்.துறையூர் ஜே.சி.ஐ அமைப்பினர்,ஓம் சாந்தி திருநங்கை சுய உதவி குழு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள்  ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.


கலந்து கொண்ட அனைவருக்கும் நகராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவம் செய்யப்பட்டது. நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர், ஆணையர் ஆகியோர் உரையாற்றியதாவது நமது நகராட்சி செயல்படுத்தும்  மக்களுக்கான அனைத்து நல் திட்டங்களுக்கும் பொதுமக்கள் மேலும் நல் ஆதரவு அளித்து நமது நகரை மிக தூய்மை நகரமாக எப்பொழுதும் வைத்திருக்க உதவிட வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad