துறையூர் நகராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 June 2023

துறையூர் நகராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா.


திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தூய்மை பணி ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதன் துவக்க நாள் நிகழ்வு 10-06-23  அன்று துறையூர் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத் தலைவர் மெடிக்கல் ந.முரளி தலைமையில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.


நிகழ்வில் சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பு செய்து வரவேற்புரை மற்றும் உறுதிமொழி வாசித்தனர். "எனது நகரம் எனது குப்பை எனது பொறுப்பு போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி வாசிக்கப்பட்டு தன்னார்வலர்கள், சிறந்த தூய்மை பணியாளர்கள், குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்து நகராட்சிக்கு வழங்கிய இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், போன்றோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.


மேலும் நிகழ்வில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்புரை மருத்துவர் அரவிந்த்சாமி ஆற்றினார். மேலும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இம்முகாமில் தூய்மை பணியாளர்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை போன்றவை இலவசமாக செய்யப்பட்டன. துறையூர் துளசி பார்மசி நிறுவனத்தார் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருந்துகளை வழங்கினர்.மேலும் தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து துறையூர் பேருந்து நிலையம் திருச்சி சாலைகளில் நடைபெற்றன.

மேலும் நிகழ்வில் நகர் அமைப்பு அலுவலர் கோவிந்தராஜ்,நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ஜானகிராமன்  ஜேசிஐ தொண்டு நிறுவனம், மற்றும் துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சௌமியா, தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் கோவிந்தராஜ், மணி, நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் களப்பணியில் இருந்தனர். மேலும் ஓம் சாந்தி திருநங்கை சுய உதவி குழு தலைவர் திருநங்கை சமூக ஆர்வலர் லாவண்யா செயலாளர் பிரியா மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தூய்மை பணி விழிப்புணர்வினை கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே சிறப்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருநங்கை சமூக ஆர்வலர் லாவண்யாவிற்கு சிறப்பு பாராட்டு சான்றிதழ் நகர் மன்ற தலைவர் செல்வராணி, துணைத் தலைவர் முரளி, ஆணையர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி ஆகியோர் வழங்கினர்.


-  செய்தியாளர் கா மணிவண்ணன் துறையூர். 

No comments:

Post a Comment

Post Top Ad