நேற்று சனிக்கிழமை திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி 20வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் வானி வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி தாளாளர் ஹாஜி ஹபீபுல்லாஹ் பட்டமளிப்பு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
கல்லூரி தலைவரும் கீழக்கரை டவுன் காஜியுமான முனைவர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீக்கி, துணைத் தலைவர் ஹாஜி ஹஸன் அஹ்மது, மற்றும் கல்லூரியின் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 24 மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இணை இயக்குனர் திருமதி நிகர் ஷாஜி பட்டமளிப்பு பேருரை நிகழ்த்தி 355 மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.தமிழக குரல் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நிகழ்ச்சியில் சமுதாய பிரமுகர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மாணவியர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment