துறையூர் எரகுடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரகுடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (21-08-24) காலை நடைபெற்றது.முகாமினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்.
எரகுடி, எ.பாதர்பேட்டை, சிறுநாவலூர், காமாட்சி புரம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், முத்துமாரி முன்னிலை வகித்தனர்.
சிறுநாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் கே. சுப்பிரமணியன், எ.பாதர்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதை மணிமாறன், காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி திருவேங்கடம், திமுக உப்பிலியபுரம் வடக்கு, தெற்கு ,ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன் அசோகன்,மற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு அரசு துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment