துறையூர் தேமுதிக கட்சியின் மேற்கு ஒன்றியம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
திருச்சி மாவட்டம் துறையூர் தேமுதிக கட்சியின் நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் விழா துறையூர் அருகே கொத்தம்பட்டியில் மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றியச்செயலாளர் வி.எஸ். சரவணன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், நகரச் செயலாளர் சங்கர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கிருஷ்ணசாமி, தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விஜயகாந்தின் புகழ் ஒலிக்க கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பிரகாஷ், வெற்றி, கலியமூர்த்தி, செல்வம், கலிங்கமடையான்பட்டி கிளைச் செயலாளர் செல்வராஜ், பிரபாகரன், ராஜகோபால், குமார், மணிகண்டன், ராமச்சந்திரன், இளையராஜா, சௌந்தர்ராஜ், ரமேஷ், பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருக புரிந்த அனைவருக்கும் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. எஸ். சரவணன் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருச்சி துறையூர் செய்தியாளர் கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment