திருச்சி மாவட்டம் துறையூர் திராவிடர் கழகம் சார்பில்
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு துவங்கி பகல் 2.30 மணி வரை நடைபெற்ற
விழாவில் துறையூர் விநாயகர் தெரு. வடக்கு விநாயகர் தெரு, சிலோன் ஆபீஸ், பாலக்கரை, பேருந்து நிலையம். கோர்ட்,முசிறி பிரிவு ரோடு,புதிய வீட்டு வசதி வாரியம், காளிப்பட்டி, கண்ணனூர் சமத்துவபுரம் ஆகிய இடங்களில் திராவிடர் கழக கொடி ஏற்றி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவில் இருசக்கர வாகனத்தில் கருஞ்சட்டை வீரர்கள் பவனி வர டாட்டா ஏசி வண்டியில் தப்பாட்டகலைஞர்கள் இசைத்துவர அனைத்து இடங்களிலும் சமூகநீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த வர்கள்
மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி,
மாநில ப.க.அமைப்பாளர் அ.சண்முகம்,மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு, மாராடி எம். ஏ. இ ரமேஷ், மாராடி சி. சத்திய சீலன், மாவட்ட ப. க. பிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.ரஞ்சித் குமார், மாவட்ட ப. க. கலை பிரியன்,ஒன்றிய தலைவர் வரதராஜ்ன்,ஒன்றிய செயலாளர் பாரதி, நகர தலைவர் க. ராஜா, நகர செயலாளர் இளையராஜா, நகர துணை செயலாளர் குணராஜன்,மாவட்ட இளைஞரணி துணை தலைவர் செ. செந்தில் குமார், மாவட்ட மாணவரணி தலைவர்
தன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சரண் ராஜ்,
காவியா, சர்ஜுன், கபில்தேவ், வழக்கறிஞர்பால்ராஜ், கோர்ட் சந்திரபோஸ்,தமிழ் புலிகள் கட்சி மாவட்ட தலைவர் ராஜா,
ப. க. அமைப்பாளர் மு. தினேஷ்,மற்றும் நடராஜன் ஆர்டிஸ்ட் தி. க. பன்னீர், திருமதி சண்முகம் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துறையூரிலிருந்து தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment