துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம்
திருச்சி மாவட்டம் துறையூர் தென் திருப்பதி என அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் மலை அடிவாரத்தில் புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னிட்டு இன்று 29-09-24 காலை துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி சங்கத் தலைவர் டி எம் செந்தில் தலைமையில், செயலாளர் சேதுபதி முன்னிலையில் சுமார் 1500க்கும் மேற்பட்டோருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் டாக்டர் விஜயகுமார், முன்னாள் தலைவர்கள் மோகன், ஞானவேல், நந்தகுமார், திருமூர்த்தி, சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் ரமேஷ், சரவணன், நந்தகுமார், சிறுநாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஸ்ரீவாரி சிவா ,கதிரவன், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துறையூரிலிருந்து கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment