துறையூர்: அஇஅதிமுகவினர் சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமோக வரவேற்பு
திருச்சி மாவட்டம் துறையூரில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 8 9 2024 அன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் சேலத்திற்கு திரும்பினார். அப்பொழுது துறையூர் வழியாக மதியம் 1 மணியளவில் வருகை புரிந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர அதிமுக சார்பில் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் திரண்டு இருந்த அதிமுகவினர் சிறப்பான அமோக வரவேற்பு அளித்தனர். இதில் மேளதாளம், பூரண கும்பம் மரியாதை மற்றும் பூங்கொத்துகள் சால்வைகள் புத்தகங்கள் போன்றவற்றை எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வரவேற்பு கொடுத்தனர். தன்னை வரவேற்க பெருந்திரளாக திரண்டு இருந்த அதிமுகவினரை கண்டு உற்சாகம் அடைந்த பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். அப்போது அதிமுகவினர் அவருக்கு ஆளுயர மாலை மற்றும் பொன்னாடை அணிவித்தனர். புறநகர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளரும் துறையூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இந்திராகாந்தி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன்.காமராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், பொதுக்குழு உறுப்பினர் சரோஜா இளங்கோவன், துறையூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன்,சேனை செல்வம் , நகரச் செயலாளர் அமைதி பாலு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் ஒன்றிய,நகர நிர்வாகிகள், மகளிர் மற்றும் இளைஞர் அணியினர், தொண்டர்கள் கொளுத்திய வெயிலையும் பாராது அலைபோல் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக துறையூரிலிருந்து கா.மணிவண்ணன்
No comments:
Post a Comment