துறையூர் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் "பொது உறுப்பினர் கூட்டம்" - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 1 September 2024

துறையூர் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் "பொது உறுப்பினர் கூட்டம்"


துறையூர் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் "பொது உறுப்பினர் கூட்டம்"


திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் 31 8 2024 அன்று துறையூர் பாலக்கரை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருச்சி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் முன்னிலை வகித்தார். 


மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட அமைத்தலைவர் அம்பிகாபதி மாவட்டத் துணைச் செயலாளர்கள் மயில்வாகனம் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 


மற்றும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சங்கை செல்லமுத்து மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாஸ்கர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருபா  மாவட்ட பிரதிநிதி பெரியசாமி உள்ளிட்ட பிரதிநிதிகள் ஒன்றிய இளைஞர் அணி கூடுதல் வழக்கறிஞர் ஜெயராஜ் மற்றும் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு வரவேற்புரை மத்திய ஒன்றிய செயலாளர் இள அண்ணாதுரை. நன்றியுரை அன்பு காந்தி கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் 234 தொகுதிகளில் சுமார் 200 தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் மேலும் திமுகவின் முப்பெரும் விழாவை திமுகவினர் இணைந்து மிகச் சிறப்பாக துறையூர் பகுதிகளில் கொண்டாட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக துறையூரிலிருந்து கா.மணிவண்ணன்

No comments:

Post a Comment

Post Top Ad